ads
தமிழகத்தில் மற்றோரு காவல் அதிகாரி தற்கொலை
ராசு (Author) Published Date : Mar 07, 2018 09:22 ISTஇந்தியா
சென்னை மாநகரத்தில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் காவல் அதிகாரி சதிஷ் குமார் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். காவல் அதிகாரி சதீஷ்குமார் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர், இன்னும் திருமணம் ஆகவில்லை.
காவல் அதிகாரி சதீஷ்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார், துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் காவல் நிலையத்தில் இருந்த மற்ற காவல் அதிகாரிகள் பதற்றத்துடன் வந்து பார்க்கையில், சதீஷ்குமார் இறந்துள்ளார். உடனே காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
அவர் இறப்பதற்குமுன் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று கடிதம் எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.