ads
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து
யசோதா (Author) Published Date : Dec 10, 2017 12:14 ISTஇந்தியா
உலக நாடுகளில் ஏராளமான மக்கள் தரிசிக்கும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் விளங்குகிறது. சாதாரண மக்களை ஒருவரிசையிலும் செல்வாக்கு மிக்க செல்வந்தர்களுக்கு ஒரு வரிசையும் தனித்தனியே கடைபிடிக்கப்படுகிறது. அதற்கேற்றவாறு டிக்கெட் கட்டணம் வசூலிக்க பட்டு வருகிறது. தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவிலின் இணை செயல் அலுவலர் ஸ்ரீனிவாச ராஜு பேசும்போது "தொடர் விடுமுறை காரணமாக விஐபி தரிசனம் வரும் 23 முதல் ஜனவரி முதல் வாரம் வரை ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து பக்தர்களின் கூட்ட நெரிசல்களினால் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை தட்டுப்பாடின்றி வழங்க இயந்திரங்கள் பயன்படுத்தப்போவதாகவும் ஜனவரி முதல் விஐபி தரிசனத்திற்கு ஆதார் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.