ads

கர்ப்பிணி பலியான சம்பவம் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

திருச்சியில் கர்ப்பிணி உஷா பலியான சம்பவம், இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரிப்போம் என நீதிபதிகள் உத்தரவு.

திருச்சியில் கர்ப்பிணி உஷா பலியான சம்பவம், இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரிப்போம் என நீதிபதிகள் உத்தரவு.

போக்குவரத்து துறை காமராஜ் என்பவர் நேற்று துவாக்குடி சுங்கச்சாவடி அருகே ராஜா மற்றும் கர்ப்பிணி பெண்ணான உஷா ஆகியோர் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்ததில் மூன்று மாத கர்ப்பிணி பெண் உஷா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு உஷாவின் மரணத்திற்கு காரணமான போக்குவரத்து துறை அதிகாரி காமராஜை கைது செய்ய கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், திருச்சி போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை தடியடி நடத்தி விரட்டினர். போராட்டம் தீவிரமடைந்த பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியை கைது செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் பிறகு கைது செய்யப்பட்ட காமராஜ் மீது இரண்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து  இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் ஆகியோர் நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு முறையிட்டனர்.

இந்த சம்பவம் கொடூரமானது, வருங்காலங்களில் இது போன்ற சம்பவம் நிகழாத வகையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டனர். இதற்கு  , இந்த சம்பவம் ஏற்றுக்கொள்ளமுடியாத தீவிரமான குற்றச்செயல் என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் அரசு சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரியை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இதனை அடுத்து "இது குறித்து மனு தாக்கல் செய்தால் வழக்கு விசாரிக்கப்படும்" என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

கர்ப்பிணி பலியான சம்பவம் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு