ads

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங்க் விளக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உபேந்திரா பிரசாத் சிங்க் விளக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உபேந்திரா பிரசாத் சிங்க் விளக்கம்

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையில் அமல்படுத்தலாம் என்று முடிவெடுக்கும் முழு அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. அதை அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைவது தொடர்பாக கர்நாடகா-தமிழ்நாடு மாநிலங்களுக்கு  இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளே தற்போது நிலவி வரும் சிக்கலுக்கு காரணம் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

 இரு மாநிலங்களின் வேறுபாடான நிலைப்பாட்டை கருத்தில் கொண்டே மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி மார்ச் 31-ம் தேதி விளக்கம்கேற்க  நேர்ந்தது. அனால் உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து மேலும் உச்சநீதி மன்ற குறிப்பிட்ட ஸ்கீமை நடைமுறைப்படுத்த வரைவும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனடிப்படையில் மே 3-ம் தேத்திய நீதிமன்றம் அளிக்கும் உத்தரவின் பேரில் ஸ்கீம் என்பதை மத்திய அரசு அமல்படுத்தும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங்க் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் டில்லியில் பேசுகையில், மாநிலங்களுக்கு இடையே ஆன நதி நீர் பங்கீடு தொடர்பான 1956 சட்டத்தில் பிரிவு 6ஏ யின்படி,  ஸ்கீம் என்று ஒன்று அமைக்கப்பட்டு இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளின் நீரைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் ஓடும் அனைத்து நதிகளுக்கும் ஸ்கீம் அமைக்கப்பட வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியமாகவோ, கண்கணிப்புக்குழுவாகவோ இருக்கலாம். ஆனால், அதன் செயல்பாடு, நதி நீரைப் பங்கிட்டுத் தருவது மட்டுமே. ஏற்கனவே நர்மதா, வாக்ரா நதிகளுக்கு நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகளுக்கு எந்த ஸ்கீமும் அமைக்கப்படவில்லை. ஏனெனில், அதற்கான அவசியம் எழவில்லை.

150 ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கும் காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளதால், அமைக்கவிருக்கும்  காவிரி நதிநீர் குழுவை முழு அதிகாரம் உடையதாக உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. இவ்வாறு, அவர் விளக்கமளித்தார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங்க் விளக்கம்