ads

இந்தியாவுக்காக வெண்கல பதக்கத்தை வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்

நடிகர் மாதவனின் மகன் தாய்லாந்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

நடிகர் மாதவனின் மகன் தாய்லாந்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட போன்ற மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவருடைய மகன் வேதந்த் சிறந்த நீச்சல் வீரர். இவர் தற்போது தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு முதல் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். சிறந்த நீச்சல் வீரரான வேதந்த், 1500 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்து இந்தியாவுக்கான முதல் வெண்கல பதக்கத்தை பதிவு செய்துள்ளார்.

இது மாதவன் குடும்பத்தினரின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு ஆகும். இது குறித்து நடிகர் மாதவன் சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமில் ஆனந்தமாய் பதிவு செய்துள்ளார். அதில் "எனக்கும் என்னுடைய மனைவி சரிதாவுக்கும் முக்கியமான, பெருமைப்படக்கூடிய தருணம் இது. என்னுடைய மகன் வேதந்த் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கான முதல் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளான். பாராட்டிய அனைவருக்கும் நன்றி  " என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்காக வெண்கல பதக்கத்தை வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்