ads

அனைவருக்கும் விகாரி வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்: செய்ய வேண்டியது

விகாரி தமிழ் புத்தாண்டின் குறிப்புக்கள்

விகாரி தமிழ் புத்தாண்டின் குறிப்புக்கள்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இன்று விளம்பி வருடம் முடிந்து விகாரி தமிழ் வருடம் பிறக்கிறது. நம்மில் பலபேருக்கு தமிழ் வருடங்களின் பெயர்கள் தெரிந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. விகாரி வருடம் தமிழ் புத்தாண்டில் 33ஆம் ஆண்டை குறிக்கும். 

தமிழ் புத்தாண்டு அறுபது பெயர்களை கொண்டுள்ளது. பிரபவ என்பது தமிழ் புத்தாண்டின் முதல் பெயர், அட்சய என்பது தமிழ் புத்தாண்டின் அறுபதாவது பெயர். இவ்வாறு தமிழில் அறுபது ஆண்டுகள் பிறந்து முடியும், பின் முதலில் இருந்து பிரபவ ஆண்டு ஆரம்பிக்கும். 

ஒவ்வொரு ஆண்டின் பெயருக்கு பொருத்தமான நிகழ்வுகள் நடக்கும் என்பது மக்களின் கருத்து. எந்த ஒரு தமிழ் வருடமாக இருந்தாலும், அனைத்து தமிழ் மக்களும் சுறுசுறுப்புடன் நேர்மையாகவும் உழைக்கவேண்டும் என்பது நமது முன்னோர்கள் கூறிய கருத்து. ஆனால் இன்றளவில் மக்கள் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் தவறான புரிதலுடன் கலாச்சாரத்தையும் உழைப்பையும் வீணடிக்கிறார்கள்.

நாகரிக வளர்ச்சி என்பது, நம்முன்னோர்கள் அவர்களின் வளர்ச்சி காலத்தில் பல சாதனைகள் மண்ணிலும் விண்ணிலும் செய்தார்கள். மூட நம்பிக்கைகளை அறவே வெறுத்தார்கள், கலாச்சாரத்தை பேணிக்காத்தார்கள். ஆனால் இன்று வரையில் சில தமிழர்கள் நாகரிக வளர்ச்சி என்பதை தவறாக புரிந்து கொண்டு, தங்களையும் - சுற்றுப்புறத்தினரையும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். 

எவரும் நம்முன்னோர்கள் செய்த சாதனைகளை செய்யவில்லை மற்றும் செய்பவருக்கு உறுதுணையாக இருப்பதும் இல்லை. 

தமிழ் புத்தாண்டு பலன்கள் என்று ஏதும் இல்லை. எந்த ஒரு ராசிக்கும் சிறப்பு பரிகாரங்கள் ஏதும் இல்லை.  எனவே அனைவரும் செய்வதை திறம்பட செய்தலும், நேர்மையாக செய்தலுமே - தமக்கே உரிய பலன்கள்.

இந்த விகாரி தமிழ் புத்தாண்டில் நாம் செய்ய வேண்டியவை  ( இந்த குறிப்புக்கள், இது நாள் வரை பின்பற்றாதவர்களுக்கு )

  • மாதம் இரண்டு முறையாவது, வீட்டை தண்ணீர் கொண்டு நன்றாக சுத்தம் செய்யுங்கள். இவ்வாறு செய்கையில், கிருமிகள் மற்றும் பூச்சிகளின் எச்சங்களை துடைத்து எறியலாம்.
  • இயற்கை முறையில்  தயாரிக்கப்பட்ட சீகைக்காய் கொண்டு சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
  • எந்த ஒரு சூழலிலும் மூட நம்பிக்கைகளை பின்பற்றாதீர்கள். மூட நம்பிக்கை என்பது, மற்றவர்கள் கூறுவதை கண்முடித்தனமாக நம்பிக்கொண்டு செய்யும் செயல். வாழையிலையில் தண்ணீர் தெளிப்பது மூட நம்பிக்கை இல்லை, வாழையிலையில் உள்ள பூச்சிகளின் எச்சங்களை மற்றும் கண்ணனுக்கு தெரியாத கிருமிகளையும் குப்பைகளையும், அகற்றுவதற்கே. தண்ணீர் தெளிப்பதற்கு பதிலாக சுத்தமாக கழுவுங்கள். இவ்வாறு மூட நம்பிக்கைகள் எது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
  • கோடைகாலத்தில் தமிழ் வருடம் பிறப்பதால், அனைவரும் காய் கனிகளை வைத்து இறைவனை வணங்குவார்கள், இதற்கு முக்கிய காரணம் வெப்பமான சூழலில் அதிக காய்கனிகள் உண்பது நமது உடம்பிற்கு தேவையான குளிர்ச்சியை தரும்.
  • அருகில் உள்ள கோயில் அல்லது தங்களின் குலதெய்வ கோயிலுக்கு சென்ற வழிபடுதல்.
  • வீட்டில் உள்ள அனைவரும் ஒரு வேலைக்காவது ஒன்று கூடி சாப்பிடவும்.
  • கண்களுக்கு தேவையான குளிர்ச்சியை தருவதற்கும், கண்களில் உள்ள நீர்களை வற்றாமல் இருப்பதற்கு மொபைல் மற்றும் தொலைக்காட்சிகளை குறைந்த அளவே உபயோக படுத்துங்கள். 
  • வியாபாரத்திற்காக மற்றவர்கள் கூறும் பொய்யான விசயங்களை நம்பி எதையும் வாங்காதீர்கள், குறிப்பாக தங்க நகைகள்.
  • குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே நல்லது மற்றும் தீய விசயங்களை பிரித்து பார்ப்பதற்கு கற்று தாருங்கள். குறைந்தது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி குழந்தைகளுடன் விளையாடுங்கள். ஒன்று கூடி விளையாடுவதின் நோக்கம், குடும்பம் சிதறாமல் இருக்கவும் மனம்விட்டு பழகுவதற்காகவே.
  • குறைந்தது வருடத்திற்கு இரண்டு மரக்கன்றுகளை நெடுங்கள், குழந்தைகளுடன்.
  • வீட்டிலேயே ஏதாவது ஒரு சமையலுக்கு தேவையான காய் வகைகளை பயிரிடுங்கள்.
  • வெளிநாட்டில் இருந்தாலும், தமிழின் சொற்களை சரியாக உச்சரிக்கும் முறையையும், தமிழகத்தில் உள்ள கோயில்களின் சிறப்புகளை தெரிந்து கொண்டு , நேரிடியாக வந்து வணங்குங்கள்.
  • பெற்றோர்கள் வயதானவுடன் குழந்தைகளை போல் குறும்புகள் செய்வதுடன் நம்மை கோபப்படவும் செய்வார்கள், அவர்களை நாம் இதே போல் சிறு வயதில் நடந்து கொண்ட சமயம் எவ்வாறு நம்மை கையாண்டார்களோ அவ்வாறே அவர்களும் பார்த்துக்கொள்ளுங்கள். 
  • தேவைக்கேற்ப சேமிப்பு செயுங்கள்.
  • எதிர்காலத்திற்கு தேவையில்லாத வேளைகளில் ஈடுபட்டு பணத்தை வீணடிக்காதீர்கள்.

அனைவருக்கும் விகாரி வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்: செய்ய வேண்டியது