ads

வடிவேலு காமெடியை போன்று திருடன் என நினைத்து அதிகாரிகளை வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

வடிவேலு காமெடியை போன்று திருடன் என நினைத்து அதிகாரிகளை வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

வடிவேலு காமெடியை போன்று திருடன் என நினைத்து அதிகாரிகளை வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

நாட்டில் தற்போது நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதனால் பொது மக்கள் பயணத்தின் போதும் சரி, வீதியில் நடந்து சென்றாலும் சரி எவன் மீதும் நம்பிக்கை இல்லாமல் அனைவரையும் திருடனாகவே பார்க்கின்றனர். திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதற்கு எவன் எப்படி போனால் என்ன என்று சுய நலமாகவும், சமூக அக்கறை இல்லாமல் திரிவதே முக்கிய காரணமாக அமைகிறது. இதில் படிக்காதவர்களை விட படித்த மக்களே அதிக சுயநலத்துடன் திரிகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நகரங்களில் அதிகரித்து வருகின்றன. ஆனால் இது போன்ற சம்பவங்கள் கிராம பகுதிகளில் நடைபெறுவது குறைவு தான். கிராம பகுதிகளில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டாலும் இது போன்ற சம்பவங்கள் மற்றும் விழா காலங்களில் அனைத்தையும் மறந்து ஒற்றுமையாகி விடுவர். இது தான் கிராமத்தின் சிறப்பு. கிராமங்கள் மக்கள் எப்போதும் இரவு நேரங்களில் எச்சரிக்கையுடனே இருப்பார்கள். இந்நிலையில் தான் அதிகாரிகள் இரண்டு பேர் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டு தர்ம அடி வாங்கியுள்ளனர்.

திருவண்ணாமலையில் வெம்பாக்கம் தாலுகாவில் அமைந்துள்ளது வடமாவந்தல் கிராமம். இந்த கிராமத்தில் நேற்று இரவு 10:30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் (மக்கள் பார்வையில்) பைக்கில் வந்துள்ளனர். சந்தேகமடைந்து அவர்களை வழிமறித்து அவர்களிடம் யார் எதற்காக வந்தீர்கள் என்று விசாரித்ததில் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சந்தேகம் தீவிரமடைந்து, அவர்களை மரத்தில் கட்டிவைத்து அடி, உதை என வெளுத்து வாங்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த தூசி காவல் அதிகாரிகள் அவர்களை மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் ஒருவர் கிராம நிர்வாக அலுவலராக செய்யாறு தாலுகாவில் பணிபுரிவதும், மற்றொருவர் வரைபட அதிகாரியாக நிலஅளவை துறையில் பணியாற்றுவதும் தெரியவந்தது. இரு அதிகாரிகளும் வெம்பாக்கம் இடத்திற்கு அருகில் திருட்டு தனமாக மது அருந்திவிட்டு போதையில் வந்துள்ளனர். அப்போது பொது மக்களிடம் துரதிஷ்டவசமாக சிக்கி 'போலீஸ்காரனுக்கே போலீஸ் அடியா' என்ற வடிவேலு காமெடியை போல் தர்மஅடி விழுந்துள்ளது. மேலும் அவர்களை பொது மக்கள் "நாங்கள் அடித்ததை வெளியில் சொன்னால் உங்களுக்கு தான் அசிங்கம்" என்று மிரட்டலும் விடுத்துள்ளனர்.

வடிவேலு காமெடியை போன்று திருடன் என நினைத்து அதிகாரிகளை வெளுத்து வாங்கிய கிராம மக்கள்