ads
இந்தியாவுக்கு விரைவில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஆய்வில் தகவல்
வேலுசாமி (Author) Published Date : Apr 15, 2018 11:18 ISTஇந்தியா
இந்தியாவில் மனிதனின் ஒழுங்கீனன்ற செயல்பாடுகளால் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் முற்றிலுமாக நீர் வறண்டு போகும் அபாயத்தை எட்டியுள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. செயற்கைகோள் உதவியால் உலகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரின் அளவுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் உலகில் உள்ள 5 லட்சம் நீர்நிலைகளில் நீரின் அளவு மிகவும் வேகமாக குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
விரைவில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் நீரின் அளவு வறண்டு ஜீரோ என்ற அளவை எட்டும். இதனால் மிகவும் சீக்கிரமாக இந்தியாவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு பருவநிலை மாற்றங்கள் மற்றும் தண்ணீர் வீணடிப்பு, மழைநீர் சேமிக்க தவறுதல் போன்ற செயல்கள் காரணமாக அமைவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த வறட்சியை உணர்த்தும் விதமாக இந்தியாவின் வறண்ட செயற்கைகோள் புகைப்படங்களும் ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு மிகுதியாக வாய்ப்புளள்து. இந்தியாவை தொடர்ந்து உலக அளவில் மொராக்கோ, ஈராக், ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.