ads
பாலியல் தொல்லையில் வசமாக சிக்கிய கோவை எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம்
மோகன்ராஜ் (Author) Published Date : Sep 20, 2018 15:33 ISTஇந்தியா
கோவையில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாக இயக்குனரான சுப்பிரமணியம் பாலியல் தொல்லையில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சத்தி மெயின் ரோட்டில் இயங்கி வரும் SNS கல்லூரியின் நிர்வாக இயக்குனரான சுப்ரமணியம் (64), 23 வயதான பெண் அலுவலக பணியாளரிடம் நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இவர் மட்டுமல்லாமல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பல பெண்களுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தங்களுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் கொடுத்து வந்த தொல்லைகளை எல்லாம் பொறுத்து கொண்டு பணிபுரிந்து வந்துள்ளனர். ஆனால் தற்போது இவர் அலுவலக பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்என்எஸ் தலைமை நிர்வாகியான நளின் என்பவருடன் உரையாடிய வாட்சப் பதிவும் வைரலாகி வருகிறது. இந்த உரையாடலில் நளின், நீயும் தான் அந்த வீடியோவில் இருக்கிறாய். நீ அவருடன் இருந்ததாக ஒப்புக்கொண்டால் அவருடன் சேர்த்து நீயும் தான் ஜெயிலுக்கு போவாய் என்று மிரட்டியுள்ளார்.
இதற்கு அந்த பாதிக்கப்பட்ட பெண் "இத்தனை நாளா உங்கள நம்பி தான் எம்டி கொடுத்த செக்ஸ் டார்ச்சரை யார்கிட்டயும் சொல்லாம மறச்சிட்டு அமைதியா இருந்தன். நேத்து கூட நீங்க பேசும் போது விடியோல இருக்கிறது நான் இல்லனு சொல்ல சொன்னீங்க. எனக்கு ஏதாச்சு ஆச்சுனா..நீங்களும் எம்டி சாரும் தான் காரணம். என்னால முடியல. நான் இருக்கிறதும் ப்ரோஜனமில்ல." என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.