ads

பள்ளிக்கூடம் செல்லும் பெண்களை கிண்டல் செய்த ஆண்களுக்கு இந்த தண்டனை வழங்கியது சரியா? தவறா?

பள்ளிக்கூடம் சென்ற பெண்களுக்கு கிண்டல் செய்த ஆண்களை பொது இடத்தில் தண்டித்த காவல் அதிகாரிகள்.

பள்ளிக்கூடம் சென்ற பெண்களுக்கு கிண்டல் செய்த ஆண்களை பொது இடத்தில் தண்டித்த காவல் அதிகாரிகள்.

 நமது நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு குடும்பத்தில் ஆண்கள் பெண்கள் இருவரும் சம்பாதித்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இடையே படிப்பு மற்றும் சம்பாதித்யத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் இருவருக்கும் உதவியாக இருப்பது கல்வி. தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற தான் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் கல்லூரிக்கு செல்கின்றனர்.

ஆனால் இதனை மறந்து தற்போதுள்ள மாணவ, மாணவிகள் சந்தோசத்திற்காகவும், காதலிப்பதற்காகவும் மட்டுமே செல்கின்றனர். இந்த கல்லூரி காலங்களில் வெறும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த விஞ்ஞானிகளால் கூட முடியாது. நட்பு, காதல் போன்றவை இருக்க வேண்டும். ஆனால் அது பொழுதுபோக்கிற்காக இருப்பதே கல்லூரிகளில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையே நடக்கும் கொடுமைகளுக்கு காரணம்.

தற்போது மாணவர்கள் கல்லூரி படிப்பில் வெறும் கெத்துக்காக புகைபிடிப்பது, குடிப்பழக்கம், தகாத நட்பு போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். இது போன்ற மாணவர்கள் பெண்களை நிம்மதியாக நடக்க கூட விடுவதில்லை. காதலிக்க வறுபுறுத்துவது, ரோட்டில் செல்லும் போது கேலி செய்வது, பின்னால் துரத்தி தொந்தரவு செய்வது போன்ற பழக்கங்களால் பெண்களை வீட்டை விட்டு அனுப்புவதற்கே பெற்றோர்கள் பயப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஆண்களே அவர்களுக்கு தொந்தரவாய் அமைவது வேதனையாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளும், அவர்களுடைய கொலைகளும் பெற்றோர்களின் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது. சமீபத்தில் சென்னை, மீனாட்சி கல்லூரி முன்பு முதல் பருவம் படித்து வந்த மாணவி அஸ்வினியை கொசு மருந்து அடிக்கும் அழகேசன் என்பவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தற்போது பல்லாவரம் பகுதியை சேர்ந்த சத்யப்ரகாஷ் என்ற இளைஞர், திருச்சியை சேர்ந்த இளம்பெண்ணை கழுத்து மற்றும் தலையை பிளேடால் அறுத்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு அடிப்படையாக இருப்பது இளம் தலைமுறையினரிடம் இருக்கும் காதல். முந்தைய காலங்களில் 10, 20 வருடங்களுக்கு மேலாக காதலித்த காதலர்கள், தற்போது ஒரு வாரத்தை கூட தாண்டுவதில்லை.

இதற்கு பொழுதுபோக்கிற்காக பழகுவதும், பணத்தை பார்த்து பழகுவதுமே அடிப்படை காரணம். ஏனென்று கேட்டால் நவீன கலாச்சாரம் என்று சொல்கின்றனர் இன்றைய தலைமுறையினர். செய்திகளில் அதிகமாக பெண்களால் தண்டிக்கப்பட்ட ஆண்களே அதிகம். அது உண்மையாக கூட இருக்கலாம். நாள் இன்றைய நவீன கலாச்சாரத்தில் ஆண்கள் பெண்கள் இருவரிடமும் தவறு உள்ளது.

இதனால் பாதிக்கப்படுவது உங்களை போன்ற இளைஞர்களை படிக்க வைக்கும் பெற்றோர்களும் உங்களை நம்பியுள்ள குடும்பமும் தான். அதை எப்போதும் மறவாதீர்கள். இந்நிலையில் தற்போது பள்ளிக்கூடம் செல்லும் பெண்களை கிண்டல் செய்த ஆண்களை காவல் அதிகாரிகள் பெண்களின் காலில் விழ வைத்துள்ளனர். இதற்கான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஆனால் இது போன்று பொது இடங்களில் இளைஞர்களை அவமானப்படுத்துவதால் இளைஞர்கள் மனதில் வஞ்சகம் என்ற விதை விதைக்கப்பட்டு விடுகிறது. இதனால் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு கொலை செய்யும் மனதிற்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் இது போன்ற தண்டனைகளால் சுற்றியுள்ள மக்களும், இளைஞர்களும் பயப்படுகின்றனர், திருந்துகின்றனர். ஆனால் இந்த தண்டனையை பாதிக்கப்பட்டவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதை பொறுத்தே அவர்களது வருங்காலமும் அமையும்.

Video Credit - Arockia Pitchai (Facebook)

பள்ளிக்கூடம் செல்லும் பெண்களை கிண்டல் செய்த ஆண்களுக்கு இந்த தண்டனை வழங்கியது சரியா? தவறா?