நடிகர் சிரஞ்சீவி வீட்டில் 16 லட்சம் அபேஸ்

       பதிவு : Nov 08, 2017 09:49 IST    
நடிகர் சிரஞ்சீவி வீட்டில் 16 லட்சம் அபேஸ்

நடிகர் சிரஞ்சீவி வீட்டில் 16 லட்சம் திருடியதாக அவரது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்த வேலைக்காரரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாத் ஜூப்ளி பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கர்னூலை சேர்ந்த தென்னய்யா என்பவர் 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்த பொருட்கள் காணாமல் போவதை அவரது குடும்பத்தினர் அறிந்தனர். கடந்த வாரம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் காணாமல் போனது. இதையடுத்து தென்னய்யா மீது சந்தேகம் எழுந்ததால் அவரிடம் சிரஞ்சீவி விசாரித்தார். ஆனால் தென்னய்யா உரிய பதில் அளிக்கவில்லையாம். 

 

இதனால் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனால் வழக்கு பதிவுசெய்து தென்னய்யாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் 2 லட்சம் திருடியதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் சிரஞ்சீவி வீட்டில் இருந்து இதுவரை 16 லட்சம் வரை திருடியதும், அதை வைத்து ஐதராபாத்தில் புறநகர் பகுதியில் 2 பிளாட் வாங்கியதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


நடிகர் சிரஞ்சீவி வீட்டில் 16 லட்சம் அபேஸ்


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்