ads

ஒவ்வொரு ஆண்டும் கூடும் 1980-களின் நடிகர்கள் சந்திப்பு

1980 movie stars meeting

1980 movie stars meeting

தற்போது வரை 1980-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த படங்கள், அதில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பற்று இன்னும் நம்மிடம் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 1980-ஆம் ஆண்டுகளில் நடித்த நடிகர்கள், நடிகைகள் ஒன்று திரண்டு தங்களது நட்பினை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக ஒன்று கூடியுள்ளனர். தற்போது மகாபலிபுரத்தில் கடற்கரை ஒட்டியுள்ள விடுதியில் கூடியுள்ளனர். இதில் அனைவரும் ஊதா நிற ஆடையணிந்து ஒன்றுதிரண்டனர். அந்த இடங்கள் முழுவதும் ஊதா நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்தாண்டு இவர்களது கொண்டாட்டத்தை இரண்டு நாட்கள் நீட்டியுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் மும்பை, கேரளா,ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களிலுள்ள பிரபலங்கள் வந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 28 பிரபலங்கள் இந்த நிகழ்வில் இணைந்தனர். இந்நிகழ்வில் பாடல்கள், போட்டிகள் மற்றும் பல்வேறு நினைவுகள் பகிர்ந்துள்ளனர். மேலும் 1960 - 70 வரை வெளிவந்து பிரபலமான இந்தி பாடல்களை ரேவதி, குஷ்பு, சுரேஷ், ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா சரத்குமார் ஆகியோர் பாடியுள்ளனர். இதில் ரேவதி மற்றும் குஷ்பூவிற்கு பரிசு வழங்கப்பட்டது. இதனை அடுத்து அனைவரும் இணைந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் கூடும் 1980-களின் நடிகர்கள் சந்திப்பு