ads

சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் உறியடி 2 படப்பிடிப்பு நிறைவு

சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் உறியடி 2 படப்பிடிப்பு நிறைவு

சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் உறியடி 2 படப்பிடிப்பு நிறைவு

தற்போது தமிழ் சினிமாவில் சமூக கருத்துக்களை அடிப்படையாக கொண்டு பல படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2016இல் அரசியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் கதையாக வெளியான படம் 'உறியடி'. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை நடிகர் சூர்யா தனது 2D என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் உருவாக்கி வருகிறார்.

முதல் பாகத்தில் இயக்கி நடித்திருந்த விஜய்குமார் இரண்டாம் பாகத்தையும் இயக்கி நடிக்கிறார். நடிப்பது மட்டுமல்லாமல் சோவ்னீர் ப்ரொடக்சன் என்ற நிறுவனம் மூலம் இணை தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். சமீபத்தில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கி 35 நாட்களுக்குள் மும்முரமாக செயல்பட்டு நிறைவு செய்துள்ளனர். இந்த படத்தில் விஜய் குமாருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த நஸ்மியா என்பவர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைமைப்பாளர் கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார். 

சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் உறியடி 2 படப்பிடிப்பு நிறைவு