ads
6 அத்தியாயம் ட்ரைலர், இசை வெளியீட்டில் - பார்த்திபன்
மோகன்ராஜ் (Author) Published Date : Nov 02, 2017 01:07 ISTபொழுதுபோக்கு
ஆஸ்கி மீடியா ஹிட் என்னும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்துள்ள '6 அத்தியாயம்' படத்தில் 6 இயக்குனர்கள் முதல் முதலாக இணைந்து ஒரு புது வித தோற்றத்தில், வித்தியாசமான கதை கலம்பத்தை முன்வைத்துள்ளனர். இந்த படத்தின் முக்கிய அம்சம் 6 குறும் படங்களை ஒன்றிணைந்து ஒரு க்ளைமாக்ஸ்சில் இறுதியை தொடுகிறது. எந்த விதத்தில் ஒன்றிணைக்கப்படுகிறது என்பதே படத்தின் மையக்கருத்து. இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிடப்பட்டது. இதில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன், இயக்குனர் சேரன், வெற்றிமாறன், சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாச்சி, இசையமைப்பாளர் தாஜ்நூர் மற்றும் சிலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன் 'மழை போன்ற கொடை வேறொன்டுமில்லை மத்திய அரசு செய்ய கூடிய வேலையை சேர்த்து விவசாயிகளுக்கு உதவி செய்து வரும் மழைக்கு எனது பணிவான நன்றி' என கூறி, நிகழ்ச்சியை சிறப்பித்து மேடையில் பேசினார்.
மழை வந்தால் எப்படி விவசாயிகளுக்கு சந்தோசத்தை அளிக்கிறதோ அது போன்று, திரைப்பட விவசாயிகளுக்கு 6 அத்தியாயம் போன்ற படங்கள் வந்தால் மெர்சலான சந்தோசத்தை அளிக்கிறது. 2.0 ஆடியோ வெளியீட்டுக்காக என்னை அழைத்தனர், அங்கு நான் தேவை இல்லை, இங்கு நான் தேவை என்று கூறினார். இதனை தொடர்ந்து 6 இயக்குனர்கள் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய காரியம் இல்லை. தமிழ் நாட்டிற்கு முதல்வர் ஆட்சி பதவிக்கே இரண்டு பேர் தேவைப்படுகிறது என்று கூறினார்.