ads

இந்த ஆண்டிற்கான 90வது ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள்

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின்

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் 'டன்கிர்க்' படம் மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

90-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் விருதுகள் வழங்கி வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி ஜிம்மி கிம்மெல் என்பவர் தொகுத்து வழங்குகிறார். ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் "த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி" படத்தில் சாம் ராக்வேல் என்பவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், சிறந்த துணை நடிகைக்கான விருது ஆலிசன் ஜேனி என்பவருக்கு "ஐ டோன்யா" படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த ஒளித்தொகுப்பு மற்றும் ஒலி இணைப்பு விருதுகளை இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய "டங்கிர்க்" படம் வென்றுள்ளது. சிறந்த படத்தொகுப்பிற்கான விருதினையும் "டங்கிர்க்" கைப்பற்றியுள்ளது.

இதனை தொடர்ந்து "எ பென்டாஸ்டிக் வுமன்" என்ற படம் சிறந்த வெளிநாட்டு படமாக சிலி நாட்டை சேர்ந்த இந்த படம் படத்திற்கு கிடைத்துள்ளது. சிறந்த அனிமேஷன் படமாக "கோகோ"வும், சிறந்த அனிமேஷன் குறும்படமாக "டியர் பாஸ்கட்பால்" என்ற படமும் விருதுகளை வென்றுள்ளது. 

"தி ஷேப் ஆஃப் வாட்டர்" படத்திற்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது கிடைத்துள்ளது. இதுதவிர, ஆடை வடிவமைப்புக்கான விருதை "பாண்டம் த்ரெட்" படமும், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருதை "டார்க்கஸ்ட் ஹார்" படமும் வென்றுள்ளன. மேலும் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை "ஐகரஸ்" என்ற படம் கைப்பற்றியுள்ளது.

இந்த ஆண்டிற்கான 90வது ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள்