ads

விஜய் சேதுபதியின் 96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

96 movie release date

96 movie release date

வருடத்திற்கு ஆறு படங்கள் விதம் வெளியிட்டு முன்னனி நடிகர்களில் ஒருவராக தற்பொழுது வலம் வரும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் சில படங்களில் வித்தியாசமான தோற்றத்தையும் கையாண்டுள்ளார். அதில் ஜூங்கா, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், 96 போன்ற படங்கள் அடங்கும்.  

விஜய் சேதுபதி 96 படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைக்கும் சில சாகசங்களில் ஈடுபட்டிருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. சேதுபதி நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சி.பிரேம்குமார் '96' படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனராக உருவெடுத்துள்ளார். திரிஷா  நாயகியாக நடித்து வருகிறார். 

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக நந்தகோபால் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் படக்குழுவினர் படத்தினை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடுவதாக கூறியுள்ளனர்.   

விஜய் சேதுபதியின் 96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு