ஆரி நடிக்கும் மெளன வலை படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்

       பதிவு : Nov 03, 2017 18:39 IST    
ஆரி நடிக்கும் மெளன வலை படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்

இயக்குனர் ராபர்ட் ராஜ் இயக்கிய 'களம்' படம் 2016-இல் ஏப்ரல் மாதம் வெளிவந்து வெற்றியடைந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர் 'மெளன வலை' என்ற படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் சாந்தனு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த படத்தின் கதாநாயகனாக 'நெடுஞ்சாலை' அறிமுகமான ஆரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நயன்தாராவுடன் மாயாவில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ம்ருதி நடிக்கவுள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி, உப்பாசனா நடிக்கிறார்கள். பாருக் பாஷா ஒளிப்பதிவில் ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார். ஸ்டன்னர் ஷாம் இந்த படத்திற்கு சண்டை பயிற்சி அளிக்கிறார்.    

 


ஆரி நடிக்கும் மெளன வலை படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்