ads

வெளியாகுமா என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்

Enai Noki Paayum Thota Dhanush Movie Dropped

Enai Noki Paayum Thota Dhanush Movie Dropped

என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் இன்று நடந்த சம்பவத்தினால் ஏற்பட்டுள்ளது. யூடூபில் இருந்து இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் போன்றவற்றை அகற்றியதே சந்தேகத்தின் முக்கிய கேள்வி. என்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்படம் 2016ஆம் ஆண்டு ஆரம்பித்து வேகமாக நடைபெற்றது, பண பிரச்சனைகள் காரணமாக இடையில் நிறுத்திவைக்கபட்டது.

நடிகர் தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தை மிகுந்த எதிர்பார்புடன் காத்துக்கொண்டிருந்த நிலையில் அவர்களை சந்தோச படுத்தும் விதமாக படத்தின் பாடல்களை யூடூபில் வெளியிட்டனர். இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் இன்று நடந்த சம்பவம், படத்தை கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவுகின்றன.

பண பிரச்சனைகளை சரிசெய்தபின் நடிகர் தனுஷ் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு காரணத்தினால், மீண்டும் தள்ளிப்போனது. இருந்தும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதால் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இன்றைய நிலை முற்றிலும் வேறுமாதிரியாக உள்ளது. இதுவரை வந்த செய்திகள் வதந்திகளே தவிர அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லை.

வெளியாகுமா என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்