கார் மோசடி வழக்கில் சிக்கிய அடுத்த கதாநாயகன் பகத் பாசில்

       பதிவு : Oct 31, 2017 14:45 IST    
கார் மோசடி வழக்கில் சிக்கிய அடுத்த கதாநாயகன் பகத் பாசில்

நடிகை அமலா பால் கார் மோசடி வழக்கில் தற்போது சிக்கியுள்ளார். இவர் புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து காரை பதிவு செய்துள்ளார். இதனால் அவர் 20 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அடைய வாய்ப்புள்ளது.

இதனை அடுத்து கார் மோசடி வழக்கில் அடுத்து சிக்கியுள்ளார் மலையாள நடிகர் பகத் பாசில். இவர் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக விளங்குகிறார். இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். இவர் புதுச்சேரியில் அமலா பாலை போலவே போலி முகவரி கொடுத்து பதிவு செய்துள்ளார். புதுச்சேரியில் லாஸ்பேட், புதுப்பேட், இரண்டாவது குறுக்குச்சந்தில் வசிப்பதாக போலியான முகவரியை கொடுத்துள்ளது கேரளா புலனாய்வு துறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இதே கேரளாவில் காரை பதிவு செய்ய 14 லட்சம் வரி செலுத்த வேண்டியிருக்கும். அதனால் புதுசேரியில் 1.5 லட்சம் கொடுத்து பதிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இந்த மாதிரியான சம்பவங்கள் குறித்து கேரளா போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏராளமானோர் இந்த மோசடி வழக்கில் சிக்க வாய்ப்புள்ளது.

 

 


கார் மோசடி வழக்கில் சிக்கிய அடுத்த கதாநாயகன் பகத் பாசில்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்