பிரபு தேவாவின் 'குலேபகாவலி' ட்ரைலர்

       பதிவு : Dec 29, 2017 17:03 IST    
gulebagavali trailer official gulebagavali trailer official

புதுமுக இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'குலேபகாவலி'. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்த படத்திற்கு காஞ்சிபுரம் சுதர்சன் இசையமைத்துள்ளார். ஆர்எஸ் ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை 'அறம்' படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, சந்தியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த படம் நடிகர் எம்ஜிஆர் நடிப்பில் 1955-ஆம் ஆண்டு வெளியான 'குலேபகாவலி' படத்தை சார்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. 

நடிகர் பிரபு தேவாவின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழா' திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சாரக் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெண்ணிலவே வெண்ணிலவே' பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.

 

நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989 ஆவது ஆண்டில் வெளியான 'இந்து' திரைப்படத்தில் நடிகை ரோஜாவுடன் இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் 'போக்கிரி', 'வில்லு' உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.அன்று முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் இவருடைய ஆட்டத்திற்கு இன்று வரை பலத்த வரவேற்பு இருந்து வருகிறது.

முன்னதாக இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் 4 பாடல்களை படக்குழு வெளியீட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலரை ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக டிசம்பர் 29-இல் வெளியிட உள்ளதாக படக்குழு படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

 


பிரபு தேவாவின் 'குலேபகாவலி' ட்ரைலர்


செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்