ads

குலேபகாவலி படத்தின் ட்ரைலர் வெளியீடு

gulebagavali trailer official

gulebagavali trailer official

நடிகர் பிரபு தேவா நடிப்பில் புதுமுக இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'குலேபகாவலி'. இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிகை  ஹன்சிகா இணைந்துள்ளார். இந்த படத்திற்கு காஞ்சிபுரம் சுதர்சன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்எஸ் ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தை 'அறம்' படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா, ஹன்சிகா,சந்தியா, ரேவதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் பிரபு தேவா 1988-ஆம் ஆண்டு வெளிவந்த 'அக்னீ நட்சத்திரம்' படத்தில் பின்னணியில் நடனமாடுபவராக திரையுலகிற்கு அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தற்போது வரை இவருடைய ஆட்டத்திற்கு இன்று வரை பலத்த வரவேற்பு காணப்படுகிறது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் 4 பாடல்களை படக்குழு வெளியீட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலரை ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக டிசம்பர் 29-இல் (நாளை) வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

குலேபகாவலி படத்தின் ட்ரைலர் வெளியீடு