அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் வெளியீடு

       பதிவு : Jan 11, 2018 14:07 IST    
iravukku ayiram kangal official trailer iravukku ayiram kangal official trailer

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த 'பிருந்தாவனம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மு.மாறன் இயக்கத்தில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', கரு.பழனியப்பன் இயக்கத்தில் 'புகழேந்தி எனும் நான்' போன்ற படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதில் மு.மாறன் இயக்கத்தில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் படப்பிடிப்புகள் கடந்த நாட்களில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. க்ரைம் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இவர் சாட்டை, புரியாத புதிர், கொடிவீரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து ஆனந்தராஜ், அஜ்மல், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சுஜா வருநீ, சாயா சிங், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி எஸ் இசையமைக்க அரவிந்த் சிங் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் சான் லோகேஷ் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். 'ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து வரும் இப்படத்தின் போஸ்டர், டீசர் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மற்றும் பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
 

 


அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் வெளியீடு


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

தங்கராஜாசெய்தியாளர்