ads
நிலவேம்பு சர்ச்சையால் கமல் மீது நடவடிக்கை இல்லை
புருசோத்தமன் (Author) Published Date : Oct 30, 2017 17:59 ISTபொழுதுபோக்கு
டெங்கு வால் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை பரிந்துரை செய்தது. இந்த நிலவேம்பு கஷாயம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் எனவும் இதற்கு டெங்குவை கட்டுப்படுத்த ஆற்றல் இருப்பதாகவும் தெரிவித்தது. அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கூடாரம் அமைத்து நிலவேம்பு கஷாயத்தை மக்களுக்கு வழங்கி வந்தனர். இந்நிலையில் கமல்ஹாசன் தனது டிவிட்டரில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கதோர் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டு கொள்கிறேன் என்று கருத்து பதிவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து கமல்ஹாசன் மீது தேவராஜ் என்பவர் புகார் தெரிவித்தார். அந்த மனுவில் நடிகர் கமல்ஹாசன் தவறான கருத்தை பகிர்ந்துள்ளார் மேலும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் டிவிட்டர் கணக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர் கமல்ஹாசன் மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு தெரிவிக்கலாம் என்று தெரிவித்தது. இது குறித்து விசாரித்த காவல்துறையினர் கமல் ஹாசன் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாததால் அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று ரத்து செய்தது.