ads

ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை பெற்று வரும் மணிகர்ணிகா டீசர்

கங்கனா ரனாவதின் மணிகர்ணிகா டீசர் ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

கங்கனா ரனாவதின் மணிகர்ணிகா டீசர் ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

சிம்பு நடிப்பில் வெளியான 'வானம்' படத்தை இயக்கியவர் இயக்குனர் க்ரிஷ். தெலுங்கு இயக்குனரான இவர் தற்போது கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் 'மணிகர்ணிகா' படத்தையும் நந்தமூறி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் 'NTR' படத்தையும் இயக்கி வருகிறார். இதில் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வரும் 'மணிகர்ணிகா' படம் சரித்திர படமாக 200 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் நடிகை கங்கனா ரணாவத் ராணி லட்சமி பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதன் பிறகு தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

மிகுந்த பொருட்செலவில் உருவாகி வந்தாலும் டீசரை மொக்கையாக வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் கங்கனா ரனாவத்தின் ஒவ்வொரு ரியாக்சனும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. ஏற்கனவே நடிகை அனுஸ்கா சர்மாவின் ஒரு ரியாக்சனை மட்டும் வைத்து நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். இதன் பிறகு கங்கனா ரனாவத் 'மணிகர்னிகா' டீசரில் நெட்டிசன்களுக்கேற்ப டீசர் முழுவதிலும் பல அதிர்ச்சியூட்டும் ரியாக்சன்களை கொடுத்து நெட்டிசன்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார். 

ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை பெற்று வரும் மணிகர்ணிகா டீசர்