ads

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருடன் ஜோடி சேர்ந்துள்ள மடோனா

நடிகர் சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் நாயகியாக மடோனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் நாயகியாக மடோனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மலையாள நடிகையான மடோனா 'ப்ரேமம்' படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் ககக போ, கவண், பவர் பாண்டி, ஜூங்கா போன்ற படங்கள் இவருடைய நடிப்பில் வெளியாகியுள்ளது. இறுதியாக வெளியான விஜய் சேதுபதியின் 'ஜூங்கா' போதிய வரவேற்பினை பெறவில்லை. தற்போது இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளதால் இவருக்கு புதிய படங்களின் வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. இவர் தற்போது கன்னடத்தில் 'கொட்டிக்கோபா' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் சசிகுமார் படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கவுள்ளார். 'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் பிரபலமான சசிகுமார் - இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.இந்த படத்திற்கு 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதன் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பினை வரும் நவம்பர் 3ஆம் தேதி முதல் துவங்கவுள்ளனர். இந்த படத்தில் நாயகியாக நடிக்க மடோனா சபாஸ்டின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மாடர்ன் பெண்ணான மடோனா 'பவர் பாண்டி' படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு சசிகுமார் படத்தில் மீண்டும் கிராமத்து பெண்ணாக நடிக்க உள்ளார்.

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருடன் ஜோடி சேர்ந்துள்ள மடோனா