ads

அமீர் கானுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் உலக அழகி

miss world manushi chillar

miss world manushi chillar

தற்போது உலக அழகி கிரீடம் சூட்டப்பட்ட மனுஷி சில்லார் அரியானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவி ஆவார். சமீபத்தில் சீனாவில் நடந்த உலக அழகி போட்டியில் உலக அழகியாக மகுடம் சூட்டபட்டார். இதனை அடுத்து மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் "இந்த பட்டம் கிடைத்தது என்னுடைய வாழ்வில் நடந்த மிகவும் முக்கியமான தருணம். நான் சீனாவில் உள்ள சான்யா நகரில் நடந்த உலக அழகி போட்டிக்கு பங்கேற்க சென்றபோது மற்ற நாடுகளை சேர்ந்த அழகிகள் என்னை பாலிவுட் நடிகை என நினைத்திருந்தனர். 

எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது வரை பாலிவுட் திரையுலகை பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் நடிகர் அமீர் கானுடன் அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன். அவர் படங்களில் சமுதாயத்துக்காக கருத்துடன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்." என அவர் தெரிவித்துள்ளார்.

அமீர் கானுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் உலக அழகி