ads

கமல், விக்ரம்,சூர்யா பட்டியலில் ஆர்.கே.சுரேஷ்

rk suresh acting in old character

rk suresh acting in old character

தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளனர். இவர்களில் விக்ரம், சூர்யா, கமல்ஹாசன், அஜித் நடிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த பட்டியலில் தற்பொழுது வில்லனாக கலக்கி வரும் ஆர்.கே.சுரேஷ் இடம் பெற உள்ளார்.      

தாரை தப்பட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி மருது, தர்மதுரை, இப்படை வெல்லும் படங்களை தொடர்ந்து பில்லா பாண்டி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இன்னும் சில படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் அளித்துள்ளார். 

இந்நிலையில் ஆர்.கே.சுரேஷ் 'சிகாரி ஷாம்பு' என்ற படத்தில் வியப்பையும் ஆச்சர்யத்தையும் அதிகப்படுத்தும் விதமாக இரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதில் 70வது வயதிற்கு மேற்பட்ட முதியவராக நடிக்கவிருக்கும் ஆர்.கே.சுரேஷ் முதியவர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.      

கமல், விக்ரம்,சூர்யா பட்டியலில் ஆர்.கே.சுரேஷ்