சூர்யாக்கு போட்டியாக பொங்கலுக்கு வெளிவரும் படங்கள்

       பதிவு : Nov 01, 2017 12:43 IST    
சூர்யாக்கு போட்டியாக பொங்கலுக்கு வெளிவரும் படங்கள்

தீபாவளிக்கு மெர்சலுக்கு போட்டியாக  சில படங்கள் வெளியீட்டில் களமிறங்கியது போன்று பொங்கலுக்கு சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு போட்டியாக சில படங்கள் களத்தில் இறங்கியுள்ளன. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் அனிருத் இசையில் 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடல் இப்பொழுது ரசிகர்களினால் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.   

 

தயாரிப்பாளராக இருந்த ஆர் கே சுரேஷ் ‘தாரை தப்பட்டை' படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் முதல் முதலாக திரைக்கு வந்தார். அதன் பிறகு இப்படை வெல்லும், தனி முகம், ஸ்கெட்ச், வேட்டை நாய் போன்ற படங்களை தொடர்ந்து பில்லா பாண்டி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சூர்யாவுக்கு போட்டியாக பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.   

இதனை தொடர்ந்து விமல் நடித்து கொண்டிருக்கும் ‘மன்னர் வகையறா' படமும் பொங்கலுக்கு வெளிவருவதாக கூறுகின்றனர். இந்த படத்தினை பூபதி பாண்டியன் இயக்குகிறார். 

 

ஆக பொங்கலுக்கு மூன்று படம் வெளிவருவத்தினை தொடர்ந்து இன்னும் சில படங்கள் பொங்கலின் பட்டியலில் இருப்பதாக தெரிகிறது. 


சூர்யாக்கு போட்டியாக பொங்கலுக்கு வெளிவரும் படங்கள்


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்