சூர்யாவின் 36வது படத்தின் இயக்குனர் யாரெனு தெரியுமா !

       பதிவு : Oct 30, 2017 18:18 IST    
சூர்யாவின் 36வது படத்தின் இயக்குனர் யாரெனு தெரியுமா !

சூரியா தற்பொழுது நடித்து வெளிவர உள்ள படம் தானா சேர்த்த கூட்டம், இப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், நந்தன துரைராஜ், ஆர் ஜே பாலாஜி போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்தில் இசையமைத்துள்ளார்.   

இந்நிலையில் சூர்யாவின் 36வது படத்தினை பற்றிய தகவல்கள் வந்துள்ளது. இப்படத்தினை செல்வராகவன் இயக்கவுள்ளார். இவர்  யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் போன்ற படங்களை இயக்கி நல்ல வரவேற்பினை பெற்றார். இறுதியாக மன்னவன் வந்தானடி படத்தினை இயக்கிய பிறகு சூர்யாவின் 36வது படத்தினை இயக்க உள்ளார்.   

 

எஸ் ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கயிருப்பதாகவும், தீபாவளி அன்று படத்தின் வெளியீடு இருப்பதாகவும் அதிகார பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. மேலும் படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் சில நாட்களில் வெளியிடவுள்ளதாம்.    

surya 36 movie, surya 36, selvaraghavan, surya official, diwali 2018, sr prabhu, suriya, surya, Suriya 36, suriya 36 updates, Suriya 36 shoot, suriya shoot updates,

சூர்யாவின் 36வது படத்தின் இயக்குனர் யாரெனு தெரியுமா !


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்