கதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்

       பதிவு : Nov 05, 2017 08:57 IST    
கதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்

இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா ஒரு கதாநாயகனாக சில படங்களில் நடித்திருந்தாலும் சினிமா துறையில் கதாநாயகனாக நிலைக்கவில்லை. ஆனால் தற்போது தனது நடிப்பு திறமையை சில படங்களில் வெளிப்படுத்தி கதாநாயகனாக மாறும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான 'இறைவி' படத்தில் அவரது நடிப்பு திறமைக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து இவர் ஸ்பைடர் மற்றும் மெர்சல் படத்தில் தன்னை வில்லனாக அறிமுக படுத்தியிருக்கிறார். 

இதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை', 'இறவாக்காளம்' போன்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனை அடுத்து இவர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைகிறார். ஸ்டோன் பென்ச் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாபி சிம்ஹாவிடம்  பேசப்பட்டது. அவர் சம்பளம் அதிகமாக கேட்டதால் 'டிமான்டி காலனி' படத்தின் மூலம் அறிமுகமான சனந்த் என்பவரிடம் பேசப்பட்டது. இவர் தற்போது பிரபுதேவா நடிக்கும் 'மெர்குரி' படத்திலும் நடித்து வருகிறார்.

 


கதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்