நடிகர் சங்கத்தின் புது வித அறிவிப்பு - 5,6 ம் தேதியில் படப்பிடிப்பு ரத்து

       பதிவு : Dec 16, 2017 19:49 IST    
nadigar sangam new anouncement nadigar sangam new anouncement

நடிகர் சங்கம் சார்பில் 2018ம் ஆண்டிற்கான 'நட்சத்திர கலைவிழா' ஜனவரி 6ம் தேதி புக்கிட் ஜாலில் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து வித முன்னனி நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், நடன கலைஞர்கள் மற்றும் மலேசியா கலைஞர்கள் என பலரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டிகளும் அரகேற்றவுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சிக்கான அனைத்து வித ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் காரணத்தினால் ஜனவரி 5 முதல் 6ம் தேதி வரை அனைத்து வித படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருப்பதாக நடிகர் சங்கம் இன்று ( 16.12.2017) அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் இந்த இரு நாட்களிலும் எந்த வித படப்பிடிப்புகளும் நடைபெறாது.   

 


நடிகர் சங்கத்தின் புது வித அறிவிப்பு - 5,6 ம் தேதியில் படப்பிடிப்பு ரத்து


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்