ads
பக்கா படத்தினை தொடர்ந்து துப்பாக்கி முனை - விக்ரம் பிரபு
ராதிகா (Author) Published Date : Dec 02, 2017 12:20 ISTMovie News
'பக்கா' படத்தினை தொடர்ந்து விக்ரம் பிரபுவின் அடுத்த பட அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் போது விக்ரம் பிரபு அதிரடி ஆக்சன் த்ரில்லரில் இறங்கி இருப்பதாக தெரிகிறது. 'V கிரேசன்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் s. தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு 'துப்பாக்கி முனை' என்று டைட்டில் வைத்துள்ளனர்.
படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு துப்பாக்கியின் புல்லட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படம் உருவாக்கவிருக்கிறது. இந்த படத்தினை தினேஷ் செல்வராஜ் இயக்க இருக்கிறார். மேலும் இவர் 'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல', 'கத்தி கப்பல்' போன்ற படங்களை இயக்கி இருப்பது குறிப்பிட்டதக்கது. இந்நிலையில் படத்தின் சம்மந்தப்பட்ட மற்ற சில தகவல்கள் படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
பக்கா படத்தினை தொடர்ந்து துப்பாக்கி முனை - விக்ரம் பிரபு
-   Tags : 
vikram prabhu next movie
vikram prabhu next movie title thuppaki munai
director dinesh selvaraj
vikram prabhu next movie announcement
thuppakki munai first look
thuppakki munai first look poster
thuppakki munai movie first look
Vikram prabhu thuppakki munai first look
thuppakki munai details
thuppakki munai movie details
ads