ads

நடிகர் அஜய் தேவ்கனின் ரெய்டு படத்தின் ட்ரைலர்

raid movie official trailer

raid movie official trailer

நடிகர் மற்றும் இயக்குனரான அஜய் தேவ்கன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'ரெய்டு'. இவருடைய நடிப்பில் இறுதியாக 'கோல்மால் அகைன்' படம் கடந்த ஆண்டு வெளியானது. இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் 'ரெய்டு', 'டோட்டல் தமால்', 'ஈலா' போன்ற படங்கள் தற்போது உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் ராஜ் குமார் குப்தா இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரெய்டு' படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலர் வெளியான 3 மணி நேரத்தில் 4 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படத்தில் நடிகை இலியானா அஜய் தேவ்கன் மனைவியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் அஜய் தேவ்கன் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் 1981 இல் லக்னோவில் நடந்த வருமான வரித்துறை சோதனையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. லக்னோவில் நடந்த இந்த சோதனையானது தற்போது வரை நிகழ்ந்துள்ள ஐடி ரெய்டில் ஒரு முக்கியமான நீண்ட சோதனையாகும். இதனை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை பனோரோமோ ஸ்டுடியோஸ் மற்றும் டீ - சீரிஸ் நிறுவனங்கள் சார்பில் அபிஷேக், புஷன் குமார், க்ரிஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு ரிதேஷ் ஷா திரைக்கதை அமைத்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் மாதம் 17-ஆம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

நடிகர் அஜய் தேவ்கனின் ரெய்டு படத்தின் ட்ரைலர்