ads
நடிகர் பரத் மற்றும் சூரியின் 8 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
வேலுசாமி (Author) Published Date : Feb 27, 2018 11:20 ISTபொழுதுபோக்கு
நடிகர் பரத் நடிப்பில் இறுதியாக கடைசி பென்ச் கார்த்தி, ஸ்பைடர் போன்ற படங்கள் வெளியானது. இதனை தொடர்ந்து பரத் நடிப்பில் சிம்பா, பொட்டு, காளிதாஸ் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் 'காளிதாஸ்' படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி சமீபத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது பரத் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் ஆர்யா, நடிகை வரலட்சுமி, இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, 'மைனா' சுகுமார், எடிட்டர் பிரசன்னா ஆகிய 8 பிரபலங்கள் நேற்று 08:08:08 PM மணியளவில் வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் பரத், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட நடிகையான பூஜா ஜவேரி நாயகியாக நடிக்கிறார். இவர் முன்னதாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'தொடரி' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய நடிப்பில் தற்போது 'ருக்குமணி வண்டி வருது' என்ற படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து இவர் பரத்துடன் '8' படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் விஜய் கவிராஜ் எழுதி இயக்குகிறார். இந்த படத்தை ஜே ஸ்டுடியோஸ் மற்றும் கிரியேட்டிவ் கிளிக் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜான் பீட்டர், ராஜ் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படம் காமெடி கலந்த பேய் படமாக உருவாக உள்ளது. ஏற்கனவே பரத் 'பொட்டு' என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக த்ரில்லர் படத்தில் இணைந்துள்ளார்.
 Bharath Next Film 8 Movie First Look Poster, Image Credit - twitter (@arya_offl)
Bharath Next Film 8 Movie First Look Poster, Image Credit - twitter (@arya_offl) After Pottu Movie Bharath Next Thriller Film Titled as 8, Image Credit - twitter (@arya_offl)
After Pottu Movie Bharath Next Thriller Film Titled as 8, Image Credit - twitter (@arya_offl)