ads
நடிகர் ராக்கின் ராம்பேஜ் திரைவிமர்சனம்
வேலுசாமி (Author) Published Date : Apr 16, 2018 18:03 ISTபொழுதுபோக்கு
பிரபல மல்யுத்த வீரர் மற்றும் நடிகரான ட்வயனே ஜான்சன் (ராக்) நடிப்பில் கடந்த ஏப்ரல் 13இல் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்து வரும் படம் 'ராம்பேஜ் (Rampage)'. உலகம் முழுவதும் வெளியான இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பிரெட் பேய்ட்டோன் என்பவர் இயக்கி உள்ளார். இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளரான பிரெட் பேய்ட்டோன் இயக்கத்தில் 'ராம்பேஜ்' படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இவர் முன்னதாக நடிகர் ராக்கின் நடிப்பில் வெளியான 'Journey 2: The Mysterious Island' மற்றும் 'San Andreas' போன்ற படங்களை இயக்கி உள்ளார்.
இந்த படங்களை தொடர்ந்து ராக்கின் நடிப்பில் வெளியான 'ராம்பேஜ்' படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் நியூ லைன் சினிமா, பிளின் பிக்ச்சர் போன்ற நிறுவனங்களின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை, அண்ணனின் உயிரை காப்பாற்ற மரபணு சோதனையில் ஈடுபடுகிறார் 'Naomie Harris'. ஒவ்வொரு விலங்கினத்திற்கும் தனி சிறப்பு இருக்கும். உதாரணமாக சிறுத்தையின் வேகம், யானையின் பலம், சிங்கத்தின் திறமை போன்றவற்றின் மூலம் உருவாகும் மரபணுவை வைத்து அண்ணனை காப்பாற்ற நினைக்கிறார்.
ஆனால் இவரின் ஆராய்ச்சியை அத்னா (Athena) ஆராய்ச்சி நிறுவனம் தவறுதலாக பயன்படுத்த நினைக்கிறது. இந்த மரபணு சோதனையை பூமியில் சோதித்தால் ஆபத்துகள் நேரிடும் என நினைத்து விண்வெளியில் ஒரு எலியை வைத்து சோதனை செய்கின்றனர். எலியின் மீது மரபணுவை செலுத்தும் போது அது அதீத வளர்ச்சி அடைந்து விண்வெளி நிலையத்தையே நாசம் செய்து ஆய்வாளர்களை கொன்று விடுகிறது. இதிலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர் மட்டும் தப்பிக்க முயல்கிறார்.
ஆனால் பூமிக்கு அந்த சோதனைக்கான மருந்துகளை கொண்டு வரும்படி அத்னா (Athena) ஆராய்ச்சி நிறுவனம் கட்டளையிடுகிறது. இதன்படி தப்பித்த ஆய்வாளர் மூன்று சோதனை மருந்துகளுடன் அவசர வழியை (Emergency POD) வழியாக தப்பிக்க முயலும்போது வெடித்து விடுகிறது. இதனால் மூன்று சோதனை மருந்துகளும் பூமியில் கடல் பகுதியிலும், காட்டு பகுதியிலும், ஜார்ஜ் என்ற கொரில்லா குரங்கின் அருகிலும் விழுகிறது. இதில் ஜார்ஜ் என்ற கொரில்லா குரங்கை நடிகர் ராக் வளர்த்து வருகிறார். இந்த கொரில்லா, சோதனை மருந்தின் அருகில் செல்லும்போது அந்த மருந்தினால் தாக்கப்படுகிறது.
இதனால் இந்த குரங்கு அதீத வளர்ச்சி அடைகிறது. வளர்ப்பு குரங்கை காப்பாற்ற ராக், சோதனை செய்த நயோமியே ஹாரிஸை அணுகுகிறார். அப்போது அண்ணனை காப்பாற்றுவதற்கு தான் மேற்கொண்ட ஆராய்ச்சியை அந்நிறுவனம் தவறுதலாக பயன்படுத்த முயல்வது நாயகனுக்கு தெரியவருகிறது. பூமியில் கடலிலும், காட்டிலும் விழுந்த சோதனை மருந்துகளால் முதலையும், ஓநாயும் தாக்கப்படுகிறது. இதனால் இரண்டு விலங்குகளும் ராட்சச வளர்ச்சி அடைந்து அதீத சக்திகளை பெறுகிறது.
இந்த சோதனை மருந்தால் தாக்கப்பட்ட விலங்குகளை அழிக்க, அத்னா (Athena) நிறுவனம் விலங்குகளுக்கு மட்டும் கேட்கும்படி ஒலி எழுப்புகிறது. இதனால் மூன்று விலங்குகளும் ஒன்று திரண்டு தாக்க வரும்போது அதனை அழித்து மரபணுவை எடுத்து உபயோகிப்பதே இந்நிறுவனத்தின் திட்டம். படத்தின் நாயகன் ராக், தன் வளர்ப்பு கொரில்லா குரங்கை வைத்து முதலையும், ஒநாயையும் எப்படி தோற்கடிக்கிறார் என்பதே இந்த படத்தின் மீதி கதை. இந்த படம் சிறந்த கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ளது. தற்போது இந்த படம் குழந்தைகள் முதல் அனைவரையும் கவர்ந்து நல்ல வசூலை படைத்து வருகிறது.