ads

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்துள்ள ஜோக்கர் குரு சோமசுந்தரம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படத்தில் குரு சோமசுந்தரம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படத்தில் குரு சோமசுந்தரம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'காலா' படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். காலாவிற்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் நீண்ட வருடங்களாக காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இவர்களுடன் தற்போது நடிகர் நடிகர் குரு சோமசுந்தரம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் 'ஜோக்கர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இந்த படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் யாக்கை, பாம்பு சட்டை, ஓடு ராஜா ஓடு போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களுக்கு பிறகு தற்போது இவருடைய நடிப்பில் 'வஞ்சகர் உலகம்' வரும் 7ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்துள்ள ஜோக்கர் குரு சோமசுந்தரம்