ads
வெளியானது ஜிவி பிரகாஷின் சர்வம் தாள மையம் டீசர்
வேலுசாமி (Author) Published Date : Nov 23, 2018 20:11 ISTபொழுதுபோக்கு
இளம் நாயகரான ஜிவி பிரகாஷ், சமூக வலைத்தளங்களில் சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது டெல்டா விவாசிகளை பாதுகாக்கவும் குரல் கொடுத்து வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது சர்வம் தாள மாயம், குப்பத்து ராஜா, அடங்காதே, 4G, ஐங்கரன், ஜெயில், வாட்ச் மென் போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது.
இதில் இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்வம் தாள மையம்' படத்தில் ஜிவி பிரகாஷ் லோக்கல் கெட்டப்பில் 'பீட்டர் ஜான்சன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இசை துறையில் சாதனை படைக்க துடிக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞனின் கதையை மையமாக கொண்டதாக இந்த படம் உருவாகி வருகின்றது.
இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக அபர்ணா பாலுமுரளி என்பவர் நடித்து வருகிறார். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தினை மைண்ட்ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.