ads

ஜோக்கர் இயக்குனருடன் இணைந்த நடிகர் ஜீவா

jiiva 33th movie director raju murugan

jiiva 33th movie director raju murugan

நடிகர் ஜீவாவின் நடிப்பில் 'கொரில்லா' படம் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் ஜீவாவின் நடிப்பில் உருவாகவுள்ள ஜீவா 31, ஜீவா 32 போன்ற படங்களை 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் இயக்குனர் ஐக்கும், 'சிங்கம் புலி' படத்தின் இயக்குனர் சாய் ரமணியும் இயக்க உள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது ஜீவாவின் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான தகவல் வந்துள்ளது. இந்த படத்தை 'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன் இயக்க உள்ளார்.

இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் டைட்டிலை நள்ளிரவு 12:01 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் ஜீவாவின் 33 வது படத்தை இயக்கவுள்ள இயக்குனர் ராஜு முருகன் முன்னதாக 'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் இவருடைய எழுத்து மற்றும் இயக்கத்தில் 2016-ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜோக்கர்' படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த வசனம், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட 12 விருதுகளை தட்டி சென்றது.

இதனை அடுத்து நடிகர் கார்த்தி மற்றும் நாகார்ஜுன் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான 'தோழா' படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் இவர் வட்டியும் முதலும், ஜிப்ஸி, ஒன்று போன்ற புத்தகங்கள் ஆனந்த விகடன் இதழில் வெளியானது. தற்போது இவருடைய இயக்கத்தில் மூன்றாவது படமாக ஜீவாவின் 33 வது படம் உருவாகவுள்ளது.

actor jiiva new movie with director raju muruganactor jiiva new movie with director raju murugan
jiiva director raju murugan new movie titlejiiva director raju murugan new movie title

ஜோக்கர் இயக்குனருடன் இணைந்த நடிகர் ஜீவா