கார்த்திக்கின் புது படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜின் புதுவித முயற்சி

       பதிவு : Feb 25, 2018 18:52 IST    
Actor Karthi New movie music director Harris Jayaraj Actor Karthi New movie music director Harris Jayaraj

நடிகர் கார்த்தி 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு பிறகு தற்போது 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா நடிக்கின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி  ரஜத் என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.  இதில் கார்த்தி ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகி இருக்கிறார். த்ரிஷாவின் 'மோகினி' படத்தை தயாரித்துள்ள பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

 

பயணத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது தொடங்கியுள்ளார். இதற்காக படப்பிடிப்பு நடத்தப்படும் இடங்களுக்கு நேரிலேயே சென்று அந்த இடத்திற்கு ஏற்ப இசையமைக்கும் முயற்சியில் ஹாரிஸ் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஹாரிஸ் பொதுவாகவே வெளிநாடுகளுக்கு பயணிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் இந்தமுறை புதுவித முயற்சியாக படப்பிடிப்பு நடத்தப்படும் தளத்திற்கு சென்று படத்தின் காட்சிக்கு ஏற்ப இசையமைக்க உள்ளார்.

 


கார்த்திக்கின் புது படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜின் புதுவித முயற்சி


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்