ads
தனது அன்னியாரின் காற்றின் மொழி ட்ரைலரை வெளியிட்ட கார்த்தி
வேலுசாமி (Author) Published Date : Nov 08, 2018 17:24 ISTபொழுதுபோக்கு
'மொழி' படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஜோதிகா மற்றும் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காற்றின் மொழி'. நடிகை ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ள இந்த படம் குடும்பத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தில் ரேடியோ ஜாக்கியாக மாறும் குடும்ப பெண் ஒருவர் சந்திக்கும் சுவாரிஷ்யமான நிகழ்வுகள் மற்றும் பிரச்சினைகள் போன்றவற்றை சார்ந்து இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் வெளியீடு தேதி சில எதிர்பாராத காரணங்களால் தள்ளி கொண்டே செல்கிறது. தற்போது இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலரில் நடிகர் சிம்புவின் 'வேற லெவல்' வசனங்களும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் வெளியீடு தேதியினை விரைவில் வெளியிட உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.