நடிகர் கதிரின் திருமணம் ஈரோட்டில் சிறப்பாக நடந்தது

       பதிவு : Mar 05, 2018 05:30 IST    
actor kathir weds sanjana erode. photo credit - kathir @am_kathir (aruntitanstudio) actor kathir weds sanjana erode. photo credit - kathir @am_kathir (aruntitanstudio)

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு தம்பியாக மிக சிறப்பாக நடித்த நடிகர் கதிர். இவர் மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் சிறந்த நடிப்பினால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிருமி மற்றும் விக்ரம் வேதா திரைப்படத்தில் அவரின் நடிப்பு மிக எதார்த்தமாக இருந்தது. 

நேற்று ஈரோட்டில் தொழிலதிபரின் மகள் சஞ்சனாவுடன் நடிகர் கதிருக்கு சொந்தங்கள் - நண்பர்கள் சூழ மிக சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது. இத்திருமணத்தில் நெருங்கிய திரைத்துறை சார்ந்த நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சென்னையில் இன்னும் சில நாட்களில் திருமண வரவேற்பு திரைத்துறையினர்க்கும் ரசிகர்களுக்கும் நடைபெற உள்ளது.

 

கதிரின் திருமணத்தை சிறப்பிக்கும் வகையில் அவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் சிங்கள் ஆடியோ பட குழுவினரால் வெளியிடப்பட்டது.

கதிரின் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் எதிர்பார்ப்பிற்குரிய படம் சிகை. இதில் கதிர் பெண் வேடமிட்டு நடிக்கிறார், இது திரில்லர் படம்.

 

PariyerumPerumal movie posterPariyerumPerumal movie poster
actor kathir weds sanjana erode. photo credit - kathir @am_kathir (aruntitanstudio)actor kathir weds sanjana erode. photo credit - kathir @am_kathir (aruntitanstudio)

நடிகர் கதிரின் திருமணம் ஈரோட்டில் சிறப்பாக நடந்தது


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

தங்கராஜாசெய்தியாளர்