ads

மார்ச் 3ஆம் தேதி வெளியாகவுள்ள மம்முட்டியின் பரோல்

Actor Mammootty New Movie Parole Released on March 3rd

Actor Mammootty New Movie Parole Released on March 3rd

மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் இறுதியாக ஜனவரி 26-இல் 'ஸ்ட்ரீட் லைட்ஸ்' படம் வெளியானது. கடந்த 16-ஆம் தேதிநடிகர் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான 'கேப்டன்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து மம்முட்டி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'பரோல்' படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சரத் சந்திப் இயக்கி உள்ளார். இந்த படத்தில் மம்முட்டி சிறை கைதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக 'வாகை சூடவா' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை இனியா நடித்துள்ளார்.

மம்முட்டிக்கு தங்கையாக இன்று நேற்று நாளை, வெற்றிவேல், எமன், தி கிரேட் பாதர் போன்ற படங்களில் நடித்த நடிகை மியா ஜார்ஜ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமுத்து, சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் மம்முட்டி நடிப்பில் 'தி கிரேட் பாதர்' படம் கடந்த ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது 'பரோல்' படத்தையும் வரும் மார்ச் 3-ஆம் தேதி படக்குழு வெளியிட உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து மம்முட்டி, இயக்குனர் கிரீஸ் தாமோதர் இயக்கத்தில் 'அங்கிள்', 'தங்க மீன்கள்' இயக்குனர் ராம் இயக்கத்தில் 'பேரன்பு', இயக்குனர் சாஜித் புதூர் இயக்கத்தில் 'Abhrahaminte Santhathikal' மற்றும் இயக்குனர் சஜீவ் பிள்ளை இயக்கத்தில் 'மாமாங்கம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

மார்ச் 3ஆம் தேதி வெளியாகவுள்ள மம்முட்டியின் பரோல்