ads

மெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் காசு மூசா

kasu mosa movie title teaser

kasu mosa movie title teaser

கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் 'மெட்ரோ'. இந்த படத்தின் மூலம் நடிகர் சிரிஷ் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் சிரிஷ் பிலிம்பேரின் சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதை பெற்றார். இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் ராஜா ரங்குஸ்கி, பிஸ்தா போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இதில் 'ராஜா ரங்குஸ்கி' படத்தை இயக்குனர் தரணீதரன் எழுதி இயக்கி வருகிறார். நடிகர் சிரிஷ் காவல் துறை அதிகாரியாக களமிறங்கியுள்ள இந்த படத்தை வசன் ப்ரொடக்சன் மற்றும் பர்மா டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தில் நடிகை சாந்தினி நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும்  ரமேஷ் பாரதி இயக்கத்தில், கிராமத்து பின்னணியில் 'பிஸ்தா' படம் உருவாகி வருகிறது. இவர் முன்னதாக வெளிவந்த 'மெட்ரோ' படத்தில் எடிட்டராக பணியாற்றியவர். இந்த படத்தின் மூலம் எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தரன் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் இசையமைப்பாளர் தரனுக்கு 25வது படமாகும். இதனை அடுத்து தற்போது சிரிஷின் அடுத்த படத்தின் தகவலை நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் தலைப்பு 'காசு மூசா' என்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்த படத்தை இயக்குனர் ஹரிஸ் மணிகண்டன் எழுதி இயக்குகிறார். நடிகர் சிரிஷ், ஆர்ஜே விக்னேஷ், அபிஷேக் ராஜா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலம் புதுமுகமான கணேசன் சேகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்திற்கு குறும்பட இயக்குனர் அசார் பிரீஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 

மெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் காசு மூசா