பா விஜயின் த்ரில்லர் படமான ஆருத்ரா

       பதிவு : Jan 04, 2018 19:47 IST    
aaruthra movie release date aaruthra movie release date

வில் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் திரைப்படம் ‘ஆருத்ரா’. இந்த படத்தில் நடிகர் பா.விஜய், கே.பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன் மேலும் மாடலிங் மங்கை தக்ஷிதா, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகாலீ ஆகிய மூன்று பேர் கதாநாயகியாக அறிமுக உள்ளனர். இவர்களுடன் நடிகர் விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மயில்சாமி, அபிசேக் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைகின்றனர்.

இந்த படத்திற்கு ‘இளைஞன்’ புகழ் பி.எல்.சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய வித்யாசாகர் இசையமைக்கிறார். ‘ஸ்ட்ராபெர்ரி’ புகழ் ஷான் லோகேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி எழுதியுள்ளார்  ா விஜய்.இந்த படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது,’ ஸ்ட ராபெர்ரி படத்தை தொடர்ந்து என்னுடைய இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம். எமோஷனல் வித் க்ரைம் த்ரில்லராக ‘ஆருத்ரா’ படம் உருவாகியிருக்கிறது. ஸ்ட்ராபெர்ரியில் எப்படி ஒரு சமூக கருத்தை அழுத்தமாக பதிவு செய்தேனோ அதே போல் இந்த படத்திலும் சமூகக்கருத்து ஒன்றை அக்கறையுடன் மையப்படுத்தியுள்ளேன்.

 

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இதில் பொறுப்புணர்வுடன் பேசப்பட்டிருக்கிறது.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இப்படத்தை பொங்கலுக்கு பிறகு வெளியிட திட்டமிட்டு வருகிறோம். இதனை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறது.’என்று தெரிவித்துள்ளார்.

aaruthra movie release dateaaruthra movie release date

பா விஜயின் த்ரில்லர் படமான ஆருத்ரா


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்