ads

பேஸ்புக் இணைய தளத்திலிருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்

பேஸ்புக்கின் தகவல் திருடப்பட்டதா எதிரொலியாக தன்னுடைய பேஸ்புக் கணக்கை நீக்கியுள்ளார் பிரபல நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான பார்ஹான் அக்ஹதர். Photo Credit - @FarOutAkhtar (Twitter)

பேஸ்புக்கின் தகவல் திருடப்பட்டதா எதிரொலியாக தன்னுடைய பேஸ்புக் கணக்கை நீக்கியுள்ளார் பிரபல நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான பார்ஹான் அக்ஹதர். Photo Credit - @FarOutAkhtar (Twitter)

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து அதன் மதிப்பை இழந்து வருகிறது. பங்கு சந்தையிலும் அதன் பங்குகள் சரிந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பேஸ்புக்கின் அலட்சியமான இதர செயலிகளின் அனுமதியே காரணம். வாடிக்கையாளர்கள் தங்களது பேஸ்புக் கணக்கை வைத்து இதர நிறுவனங்களின் செயலியுடன் பேஸ்புக்கை இணைத்து கொள்ளலாம், அவ்வாறு இணையும் போது அவர்களது அனுமதி இல்லாமலே நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை எடுத்துகொள்ள முடியும்.

அவ்வாறு தகவல்களை எடுத்து, கடந்த அமெரிக்க தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் தற்போதுள்ள அதிபர் டிரம்ப்ற்கு உதவியதாக செய்திகள் வெளிவந்தது. இதற்கு பேஸ்புக் நிறுவனர் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். இதனால் மணமுடைந்த பிரபலங்கள் தங்களது பேஸ்புக் இணையத்தில் உள்ள ரகசிய தகவல்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த தகவல்கள் வெளியே செல்லாமல் இருக்கு தங்களது கணக்குகளை அகற்றி கொண்டனர், அதை செய்திகள் மூலமாகவும், அடுத்த புகழ்பெற்ற சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலமாகவும் தெரிவித்தனர். 

இதனால் விரக்தியடைந்த பொது மக்கள் "#DeleteFacebook" என்னும் வார்த்தையை பயன் படுத்தி சமூக வலைத்தளங்களில் பரவ செய்தனர். இதனால் பெரும்பாலான பேஸ்புக் பயனாளர்கள் தங்களது கணக்கை அகற்றினர். அன்றில் இருந்து தற்போது வரை பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் சரிய தொடங்கியுள்ளது.

இதன் பிரதிபலிப்பாக இன்று புகழ் பெற்ற ஹிந்தி நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான பார்ஹான் அக்ஹதர் அவர்கள், தனது பேஸ்புக் கணக்கை நிரந்தரமாக அகற்றி உள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பேஸ்புக்கை நீக்கிய பிறகு அவரது பேஸ்புக் பக்கம் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார். இவர் வெளிவருவதற்கு "#DeleteFacebook" மற்றும் பேஸ்புக் நம்பகத்தன்மை இல்லாததே காரணம். இவரை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் தங்களது பேஸ்புக் கணக்கை அகற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

பேஸ்புக் இணைய தளத்திலிருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்