நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பட்டியல் சேகர் இயற்கை எய்தினார்

       பதிவு : Mar 07, 2018 14:39 IST    
நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் தந்தை பட்டியல் சேகர் உடல்நல குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் தந்தை பட்டியல் சேகர் உடல்நல குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.

இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணா ஆகியோரின் தந்தையான தயாரிப்பாளர் பட்டியல் சேகர் உடல்நிலை குறைவு காரணமாக இன்று காலமானார். தயாரிப்பாளர் பட்டியல் சேகர், தனது மகனான பில்லா, ஆரம்பம் போன்ற படங்களின் இயக்குனரான விஷ்னுவர்தன் இயக்கத்தில் கடந்த 2006 -இல் வெளியான 'பட்டியல்' படத்தை தயாரித்திருந்தார்.

இந்த படம் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த முதல் படம். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 'பட்டியல் சேகர்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து இவருடைய தயாரிப்பில் தனது மகனான நடிகர் கிருஷ்ணாவின் நடிப்பில் கழுகு, அலிபாபா, கற்றது களவு போன்ற படங்கள் வெளியானது. இதனை அடுத்து தயாரிப்பாளரான இவர் கடந்த 2015-இல் வெளியான 'ராஜதந்திரம்' என்ற படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

 

இந்த படத்தில் நடிகர் வீரபாகு, ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 63 வயதான இவர் உடல்நிலை காரணமாக ஒருவாரமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இன்று திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவிற்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது இவருடைய உடல் அஞ்சலிக்காக சென்னை கோடம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு மாலை இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

 


நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பட்டியல் சேகர் இயற்கை எய்தினார்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்