ads

ஜூலிக்கு ஈடு இணையே இல்லை நடிகர் சதிஷ்

ஜூலிக்கு போட்டியாக யார் வந்தாலும் அவருக்கு ஈடு இணையே கிடையாது என்று நடிகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

ஜூலிக்கு போட்டியாக யார் வந்தாலும் அவருக்கு ஈடு இணையே கிடையாது என்று நடிகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 கோலாகலமாக துவங்கியுள்ளது. கடந்த ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் முதல் சீசன் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் சீசன் 2 16 போட்டியாளர்களுடன் துவங்கியுள்ளது. ஐபிஎல் முடிந்த பிறகு பொழுதுபோக்குக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 2வை துவங்கியுள்ளனர்.

சினிமாவில் படங்கள் இல்லாத பிரபலங்கள் , தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும்  பிரபலங்கள் ஆகியோரை வைத்து ஒரே வீட்டில் 100 நாள் வேலை திட்டம் போன்று 100 நாட்கள் பல நிபந்தனைகளுடன் தங்க வேண்டும். நிபந்தனைகளை மதிக்காதவர்கள் வெளியேற்ற படுவர். அந்த வகையில் ஆரவ் கடந்த ஆண்டு பிக் பாஸ் முதல் சீஸனின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகு இந்த ஆண்டின் வெற்றியாளர் 16 பிரபலங்களில் யார் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இதனால் 9மணிக்கு ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சிக்கு 8 மணிக்கெல்லாம் ரசிகர்கள் டிவி முன்னாடி உட்காந்து விடுகின்றனர். இது தவிர நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளிலே மும்தாஜ், யாஷிகா ஆகியோருக்கு ஆர்மி ரெடியாகி விட்டது. இந்த நிகழ்ச்சியில் மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா தத், ஹ்ரிக் ஹாசன், நித்யா, மமதி, தாடி பாலாஜி, ரித்விகா, சென்றாயன், ரம்யா என்எஸ்கே ஆனந்த் வைத்யநாதன், ஜனனி, வைஷ்ணவி, டேனியல், மகத், பொன்னம்பலம் போன்ற 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களின் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது என்று முதல் நாளே ஓவியா அலெர்ட் செய்து விட்டார். இனி இவர்களுடைய விஸ்வரூபம் என்னவென்று போக போக தான் தெரியும். இந்நிலையில் நடிகர் சதிஷ் தனது டிவிட்டரில் முன்பு வெளியான சீசன் 1இல் கலந்து கொண்ட பிரபலங்கள் கதாபாத்திரத்தை அப்படியே சீசன் 2விலும் கொண்டு வந்துள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவருடைய டிவிட்டரில், சீசன் 2வில் பரணிக்கு பதிலாக சென்றாயன், ஆரவுக்கு பதிலாக ஹாரிக் ஹாசன், வையாபுரிக்கு பதிலாக பாலாஜி, கஞ்சா கருப்புக்கு பதிலாக பொன்னம்பலம், ரைசாவுக்கு பதிலாக யாஷிகா, நமீதாவுக்கு பதிலாக மும்தாஜ்,  கவிஞர் ஸ்நேகனுக்கு பதிலாக ஆனந்த் மற்றும் ஓவியாவுக்கு பதிலாக ஓவியா தான். ஆனால் மட்டும் ஈடு இணையே கிடையாது என கேலியாக பதிவு செய்துள்ளார்.

பொழுது போக்குக்கு ஆல் இல்லாமல், கமன்ட் இல்லாமல் வெறிசோடி காணப்பட்ட சமூக வலைத்தளம் தற்போது பிக் பாஸ் சீசன் 2வின் அதிரடி வருகையால் சமூக வலைத்தளமே கமெண்டால் நிரம்பி வழிகிறது. மொத்தத்தில் பிக்பாஸ் சீசன் 2 நெட்டிசன்களுக்கு தற்போது கிடைத்துள்ள வரப்பிரசாதம்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்கள்

ஜூலிக்கு ஈடு இணையே இல்லை நடிகர் சதிஷ்