ads

விண்ணைத்தாண்டி வருவாயா 2வில் டபுள் ரோலில் சிம்பு

விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தில் சிம்பு இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தில் சிம்பு இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் சிம்பு 'செக்க சிவந்த வானம்' படத்திற்கு பிறகு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்திலும், வெங்கட் பிரபுவின் 'மாநாடு' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சிம்புவிற்கு பதிலாக மாதவன் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், ரசிகர்களின் புலம்பலினால் மீண்டும் சிம்புவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நடிகர் சிம்பு கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே சிம்புவிற்கு திருப்பு முனையாக அமைந்தது. இதன் பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

முந்தைய இரண்டு படங்களுக்கு இசைமைத்துள்ள இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. ஏற்கனவே சிம்பு, இரட்டை வேடத்தில் நடித்திருந்த 'மன்மதன்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் மீண்டும் இரட்டை கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாக தகவல் வெளியாகிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா 2வில் டபுள் ரோலில் சிம்பு