ads

நடிகர் சுந்தீப் கிஷனின் கண்ணாடி பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் சுந்தீப் கிஷனின் கண்ணாடி பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் சுந்தீப் கிஷனின் கண்ணாடி பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சுந்தீப் கிஷன் நடிப்பில் இறுதியாக கடந்த ஆண்டில் நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் மாயவன் போன்ற படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருவதால் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

இவருடைய நடிப்பில் அடுத்ததாக தமிழில் 'கண்ணாடி' என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அன்யா சிங் என்பவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தினை கார்த்திக் ராஜு இயக்கி வருகிறார். வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். விரைவில் இவருடைய நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நரகாசூரன்' படமும் வெளியாகவுள்ளது.

நடிகர் சுந்தீப் கிஷனின் கண்ணாடி பர்ஸ்ட் லுக் போஸ்டர்