ads

விமல் படத்தின் புது டைட்டில் கன்னி ராசி

vemal new film title kanni raasi

vemal new film title kanni raasi

இயக்குனர் ராஜசேகரன் இயக்கத்தில் விமல் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த 'மாப்ள சிங்கம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது விமல், பூபதி பாண்டியன் இயக்கத்தில் 'மன்னர் வகையறா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை விமலுக்கு சொந்தமான 'அரசு ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் விமலே தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக  ‘கயல்’ ஆனந்தி, சாந்தினி தமிழரசன் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து  பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு, நீலிமா ராணி என திரைப்பட வட்டாரங்கள் இணைந்துள்ளனர். 

இந்த படத்தினை தொடர்ந்து விமல், இயக்குநர் சுந்தர்.சி-யிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த முத்துகுமார் இயக்கிவரும் ‘காதல் மன்னன்' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலக்ஷ்மி சரத்குமார் இணைந்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் பாண்டியராஜன், ‘போராளி’ புகழ் திலீபன், சாம்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் ரோபோ ஷங்கர், யோகி பாபு காமெடிகளில் கலக்கி வருகின்றனர்.   

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இப்படத்தின் டைட்டிலை ‘கன்னி ராசி’ என்று மாற்றியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு படக்குழு விரைவில் வெளியிட்டு, புது டைட்டில் போஸ்டர் மற்றும் டீசர், ட்ரைலர் வெளியீட்டு தேதியை குறித்த தகவல் மிகவிரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புது டைட்டில் நடிகர் பிரபுவின் நடிப்பில் 1985ம் ஆண்டு வெளியான படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.       

விமல் படத்தின் புது டைட்டில் கன்னி ராசி